திருமங்கலம், ஜூன் 13: திருமங்கலம் நகரில் பல்வேறு பகுதியில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டால் பொது மக்கள் அவதியடைந்தனர். திருமங்கலம் நகரில் தினசரி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு 7 மணியில் இருந்து நகரில் உசிலம்பட்டி ரோடு, சந்தைப்பேட்டை, செங்குளம் முன்சீப் கோர்ட் ரோடு, உத்தண்டன் தெரு,
காமாட்சியம்மன் கோயில் தெரு, அனந்தன் தெரு, கொடிமரத்தெரு, ராஜாஜி தெரு, காமராஜபுரம், கற்பகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டது. இந்த அறிவிக்கப்படாத மின்தடையால் நகர மக்கள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து மின்வாரியத்தில் கேட்டபோது, டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதால் மின்தடை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
