திருவாடானை அருகே குருந்தங்குடியை அடுத்த சிறுகாரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (56). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு செல்வதற்காக ஓரியூர்- தேவகோட்டை நெடுஞ்சாலையில் உள்ள குருந்தங்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து செல்வராஜ் மீது மோதியதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடியுள்ளார்.
அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து டிரைவரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் (60) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
