பணம் பறித்த ரவுடி கைது

திருச்சி. ஜூன் 13: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (34). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் ஜூன் 11ம் தேதி கல்லான்குத்து ஆஞ்சநேயர் கோவில் வழியாக வீட்டிற்கு சென்றார்.

அப்போது, அவ்வழியாக வந்த நபர் சார்லஸை வழிமறித்து மது அருந்துவதற்காகப் பணம் கேட்டார், அவர் தர மறுக்கவே, கத்தியை காட்டி மிரட்டி சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.950 பணத்தை பறித்து சென்றார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குபதிந்து மேலஅம்பிகாபுரம் அண்ணாநகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி இளவரசன் (28) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.350 பணம் மற்றும் அரிவாளை பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: