லஞ்சம் வாங்கிய புகாரில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

பழநி, ஜூன் 13: பழநி அருகே விபத்து வழக்கில் லஞ்சம் வாங்கிய புகாரில் இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்தும் டிஐஜி உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், பழநி சரகம் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு சுதாராணி, சிறப்பு எஸ்ஐ ராஜூ ஆகியோர் ஒரு விபத்து வழக்கில் லஞ்சம் பெற்றதாக கடந்த ஜூன் 2ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சுதாராணி திண்டுக்கல்லில் சரக டிஐஜி சசிமோகனை சந்தித்து மனு அளித்திருந்தார். இதன்பேரில் விசாரணை நடத்துமாறு டிஐஜி உத்தரவிட்டார். டிஎஸ்பி தனஞ்ஜெயன் விசாரணை நடத்தி டிஐஜி அறிக்கை சமர்பித்தார். இதன்பேரில் நேற்று சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவரும், தற்போது திண்டுக்கல் நக்சல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவருமான மருதுபாண்டியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டார்.

 

Related Stories: