குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

ராமேஸ்வரம், ஜூன் 13: உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னப்பாலம் நடுநிலைப் பள்ளியில் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளின் உறுதி மொழி ஏற்பு தலைமையாசிரியர் செல்லம்மாள் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

ஆசிரியர் லியோன், பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதன் அவசியம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசினார். தொடர்ந்து மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.

 

Related Stories: