வத்தலக்குண்டு, ஜூன் 13: வத்தலக்குண்டு உப மின் நிலையத்தில் வரும் ஜூன் 15ம் தேதி தேதி திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்கிருந்து மின்சாரம் பெறும் வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, கணவாய்பட்டி, கட்டகாமன்பட்டி, ஆடுசாபட்டி, குரும்பபட்டி, கன்னிமார் கோவில்பட்டி, பண்ணைபட்டி வாட்டர் ஒர்க்ஸ், கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, சாமியார் மூப்பனூர், கீழகோவில்பட்டி, வெங்கடாஸ்திரி கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயன் தெரிவித்துள்ளார்.
