தேனி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் சில்வார்பட்டியில் சாலையில் பள்ளி மாணவர்கள் பேருந்துக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு செல்வார்கள். இந்நிலையில் சரக்கு வாகனம், வேன், கார், சுற்றுலா வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.
இதனால் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவர்கள் சாலையில் பயந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் சாலையில் செல்லும் அதிவேக வாகனங்களால் டூவீலர் மற்றும் சைக்கிளில் செல்வோர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே சில்வார்பட்டி ஊருக்குள் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
