வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

ராஜபாளையம் அருகே வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் என்பவர், ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து, இரவு வீடு திரும்பும் போது ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே, 3 பேர் அவரை வழிமறித்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் பாண்டியராஜ் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவை சேர்ந்த மாரிச்செல்வம், குமரன் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ், மற்றும் முத்துப்பாண்டி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

 

Related Stories: