நிலக்கோட்டை, ஜூன் 11: நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று ஜூன் 11ம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், புதூர், அப்பாபிள்ளைபட்டி, குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலிநாயக்கன்பட்டி, சுட்டிகாலாடிபட்டி, அவ்வையம்பட்டி, மணியக்காரன்பட்டி, பங்களாப்பட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி, சின்னம்மநாயக்கன் கோட்டை, என்.ஊத்துப்பட்டி, கோட்டூர், கீழகோவில்பட்டி, வெங்கடாஸ்திரி கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயன் தெரிவித்தள்ளார்.
