கிடப்பில் போடப்பட்ட ஜல்ஜீவன் திட்ட பணியை துவங்க கோரிக்கை

தொண்டி, ஜூன் 11: தொண்டி அருகே நம்புதாளையில் கிடப்பில் போடப்பட்ட ஜல் ஜீவன் திட்டப்பணிகளை உடனடியாக துவங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமங்கள் தோறும் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் வழங்க ஜல் ஜிவன் திட்டம் துவங்கப்பட்டது. திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் இத்திட்டம் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் நம்புதாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் குழாய் வழங்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால் இது நாள் வரையிலும் எவ்வித பணியும் துவங்கவில்லை. இதையடுத்து எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அப்துல் மஜீத் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு கொடுத்தார். ஆனாலும் எவ்வித பணியும் துவங்கப்படாமல் உள்ளது.

இது குறித்து அப்துல் மஜித் கூறியது, நம்புதாளையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இத்திட்டன் கீழ் தண்ணீர் பிரச்னை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பகுதியில் எவ்வித பணியும் துவங்கப்படாமலும் அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமா உள்ளது. என்றார்.

 

Related Stories: