பாசிசத்தின் மற்றொரு முகமாக ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பாசிசத்தின் மற்றொரு முகமாக செயல்பட்டு, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு, என உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சோபா மாடால் அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை, அரசு கேபிளில் இருந்து நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ரீல்ஸ் கன்டட்டுக்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று டயலாக் பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது. மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு முகமாக ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு.

ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசு தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: