சென்னை: சென்னை, கோயம்பேடு, சிஎம்டிஏ கட்டடத்தில் உள்ள நகர் ஊரமைப்பு ஆணையரகம் அலுவலக கூட்டரங்கில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில், நகர் ஊரமைப்பு ஆணையரகம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு நகர் ஊரமைப்பு துறையில் உதவி இயக்குநர் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் நிர்வாக அமைப்பு, துறை கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், மண்டல திட்டங்கள், முழுமை திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கிய கூறுகள், குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
