சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு

சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறவுள்ள முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன. இதையொட்டி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு அதிகாரப்பூர்வ அழைப்பை வழங்கினார்.

கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூன் 18ம் தேதி ஆளுநர் உரையாற்ற உள்ளார். இதற்கிடையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், மாநிலம் முழுவதும் நிலவும் மின்வெட்டு பிரச்னை மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, கடந்த அரசின் கடைசி கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், புதிய அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டை இந்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: