தெருவிளக்குகள் எரிகிறதா என ஆய்வு

கோவை, ஜூன் 11: ேகாவை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 1,03,755 தெரு விளக்குகள் அமைந்துள்ளன. இவற்றை முறையாக பராமரிக்க, எரியாத தெருவிளக்குகளை கண்டறிந்து சரி செய்ய உத்தரவிடப்பட்டது. நேற்று இரவு மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா உத்தரவின் பேரில், அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் எரியாத தெருவிளக்குகளின் விவரங்களை சேகரித்து, உடனடியாக தெருவிளக்குகள் எரிவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டது.மரக்கடை சாலை, மில் ரோடு, பூமார்க்கெட், சுக்கிரவார்பேட்டை, காந்திபார்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளின் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சி கமிஷனர் ேநரடியாக ஆய்வு செய்தார்.

Related Stories: