தொண்டாமுத்தூர், ஜூன் 11: கோவை அருகே பேரூர் பகுதியில் இருந்து சிட்ரா வரை பாலிடெக்னிக் செல்லும் 2ம் நம்பர் மாநகர பஸ்சை காலை 5:30 மணிக்கு இயக்க வேண்டும் என பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரூர் பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பீளமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தினந்தோறும் வேலைக்கு செல்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக செல்ல 2ம் நம்பர் அரசு பேருந்தை 5:30 மணிக்கு இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
