பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கு கவனம் செலுத்துவேன்

கோவை, ஜூன் 4: பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கு கவனம் செலுத்துவேன் என புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பேட்டியளித்தார்.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கமிஷனர் அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு கமிஷனராக கட்டா ரவி தேஜா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவை மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் பணியாற்றிய அனுபவம் உதவியாக இருக்கும். கோவை மாநகராட்சி பொருத்தவரை குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை, பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள், குறிப்பாக பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கு கவனம் செலுத்துவேன். கோவை மாநகராட்சியில் பணிபுரிவதை பெருமையாக நினைக்கிறேன்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் பேசும் போது தான் பல்வேறு விஷயங்கள் தெரியவரும். கள ஆய்வு மேற்கொண்டு பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வை காண்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். கோவை மாநகராட்சியில் 97 பேர் திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் இருக்கிறார்கள், ஆட்சி தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியாக இருக்கும் போது சவால் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, என்ன விதிகள் உள்ளதோ அதன்படி நடப்போம் என கமிஷனர் தெரிவித்தார்.

Related Stories: