இன்டெக் – 2026 கண்காட்சியில் எல்ஜி ஏர் கம்ப்ரசர்கள்: அறக்கட்டளை நிறுவனருக்கு விருது

கோவை, ஜூன் 6: கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் 21-வது இன்டெக் தொழிற்துறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் எல்ஜி நிறுவனம் தனது அதிநவீன ஏர் கம்ப்ரசர்களை காட்சிப்படுத்தி உள்ளது.

இந்த கண்காட்சிக்கு பிளாட்டினம் ஸ்பான்சராக இருக்கும் எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம், தொழிற்துறை பயன்பாடுகளில் அதிக செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் சேமிப்பை வழங்கும் விரிவான கம்ப்ரஸ்ட் ஏர் அமைப்புகள் மற்றும் துணை உபகரணங்களை ஹால் பி, ஸ்டால் 2-ல் காட்சிப்படுத்தியுள்ளது.

இது குறித்து எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில், ‘‘ஆற்றல் பயன்பாடு மற்றும் மொத்த இயக்க செலவையும் குறைக்க உதவும் கம்ப்ரஸ்ட் ஏர் தீர்வுகளை உருவாக்குவதில் எல்ஜி நிறுவனம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அதிக ஆற்றல் திறன், தொழிற்துறையில் நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.’’ என்றார்.

எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அன்வர் ஜெய் வரதராஜ் கூறுகையில், ‘‘ செயல்திறனை மேம்படுத்தவும், இயக்க செலவுகளை குறைக்கவும் உதவும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது’’. என்றார்.

Related Stories: