மதுக்கரையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்று நடும் விழா

 

மதுக்கரை, ஜூன் 9: உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மதுக்கரை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தமிழ்நாடு வனத்துறை ஆகியவை இணைந்து, மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மதுக்கரை, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி செல்வி உமா மகேஸ்வரி, கூடுதல் சார்பு நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், மதுக்கரை வனச்சரக அலுவலர் அருண்குமார் உள்ளிட்ட வனத்துறை மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: