வேளச்சேரி: சென்னை ஐஐடியில் படிக்கும் 20 வயது மாணவி, தரமணியில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று தரமணி பகுதியில் நடந்து சென்ற மாணவியை, பைக்கில் வந்த 2 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவி சத்தம் போட்டார். சத்தம் ேகட்டு திரண்டு வந்த பொதுமக்கள் பைக் பின்னால் உட்கார்ந்து இருந்த வாலிபரை பிடித்து, தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் பைக்கில் தப்பி சென்ற மற்றொரு வாலிபரையும் தேடி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த விஜய் (30), விக்னேஷ்வர் (27) என தெரிய வந்தது. இவர்கள் இருவரும் வேளச்சேரியில் தங்கி, செல்போன் கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.
