டூவீலரில் 12.5 கிலோ கஞ்சா கடத்திய தவெக பிரமுகர்

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த அரசிராமணி பேரூராட்சியில், மூலப்பாதை பகுதியில் கஞ்சா பதுக்கி, இளைஞர்கள் மூலம் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்து சங்ககிரி போலீசார், நேற்று அரசிராமணி அடுத்த மூலப்பாதை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக 3 டூவீலர்களில் வந்த 6 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் அரசிராமணி செட்டிபட்டி சந்தை பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் பூபதி ராஜா (26), சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த முன்னா (28), அன்னதானப்பட்டியை சேர்ந்த நந்தபாலன் (23), இடைப்பாடி காந்தி நகர் தேவேந்திரன் (19), சேலம் செவ்வாய்பேட்டை பூபதி(25), காந்திநகர் லோகேஷ்(27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, 3 டூவீலர்களுடன் 12.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட தவெக பிரமுகர் உள்பட 6 பேரையும் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: