சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா, பாயாசமா? நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க. செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் பிளாக் அவுட் பண்ணுவீங்க. யூடியூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ.. அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார்.
மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் அமலாக்கத்துறையால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மாஸ்டர் மைன்ட் என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார். ஆதவ் அர்ஜூனா அவர்களே… ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? அமலாக்கத்துறை ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் மாஸ்டர் மைன்ட் என அமலாக்கத்துறை கூறியுள்ளது தானே?
தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே? இந்த உண்மைகளை தொடர்புபடுத்தி தானே . மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடித்தீர்கள். அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா? ஜனநாயகக் குரலை நெரிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக மாரிதாஸ் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
