சென்னை: திமுக ஐடி விங் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட ‘ஜான் பிரிட்டோ’, தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.
‘தூய சக்தி’ போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் ‘போதை சக்தியாக’ மாறிவிட்டதா?.
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்ற தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா? முதல்வர் விஜய் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
