மின்துறையில் காலியான 15,000 இடங்கள் இந்தாண்டு நிரப்பப்படும் கருவிகளில் பிரச்னையால்தான் மின்தடை: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேட்டி

சென்னை: சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் கூறியதாவது;
15 வருடங்களுக்கு மேல் காத்திருந்த 300 உதவிப் பொறியாளர்கள் சில நாட்களுக்கு முன் செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டார்கள். இந்த துறையில் பணியாளர்கள் பணிச்சுமையில் உள்ளார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் போராடியுள்ளார்கள்; இதற்கு மேலும் தாமதிக்காமல் அவர்களுக்கான பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரத்துறையில் 70,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதனால், இந்த ஆண்டு குறைந்தது 15,000 பேரை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

தமிழகத்தில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லை; கருவிகளில் பிரச்னை ஏற்படுவதால் மின்தடை ஏற்படுகிறது. அதிகமாக உள்ள மின்சாரத்தை விற்றதன் மூலம் வருமானமும் வந்துள்ளது. மின்தடையை உடனடியாக சரிசெய்ய அதிகமான குழுக்கள் அமைத்துள்ளோம்; அவர்கள் உடனடியாக சரி செய்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் மின்மாற்றிகளில் 70 சதவீதம் மின்மாற்றிகள் 20 வருடங்கள் பழமையானவை. அதில் பிரச்னைகள் வரத்தான் செய்யும்; சரிசெய்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் துணைமின் நிலையங்கள் நிறைய தேவைப்படுகிறது. ஒருசில இடங்களில் சில நபர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு மின் தடையை ஏற்படுத்துகிறார்கள். எங்கெல்லாம் நிதி வீணாகிறதோ அதையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

Related Stories: