4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 15, 12 வயது சகோதரர்கள் கைது

சிவகங்கை, ஜூன் 8: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஒரு கிராமத்தில் 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 15 மற்றும் 12 வயது சகோதரர்களான இரண்டு சிறுவர்கள் தங்களது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சகோதரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: