பரந்தூர் மக்களின் உரிமையை மீறி திட்டத்தை கொண்டு வந்தால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் சட்டரீதியான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். விமான நிலையத் திட்டத்தால் ஏற்கனவே அச்சத்திலும் உறுதியற்ற நிலையிலும் வாழ்ந்து வரும் மக்களுக்கு தற்போது மீண்டும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக பரவி வரும் தகவல்கள் மேலும் மன உளைச்சலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மாநில அரசும், ஒன்றிய அரசும் மேற்கொள்ளக் கூடாது. மக்களின் உரிமைகளை மீறி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த திட்டங்களும் திணிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், என் தலைமையில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாபெரும் ஜனநாயக ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்படும்.

Related Stories: