தமிழகம் முழுவதும் 40 சார்பதிவாளர்கள் மாற்றம்: பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 40 சார்பதிவாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவு: தூத்துக்குடி இணை எண்2 சார்பதிவாளர் தனசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளராகவும், ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் சசிகலா, காஞ்சிபுரம் இணை எண்4 சார்பதிவாளராகவும்,

மரக்காணம் சார்பதிவாளர் காமேஷ், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சார்பதிவாளராகவும், திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காடு சார்பதிவாளர் லோகேஷ்பாபு, பேரம்பாக்கம் சார்பதிவாளராகவும், விழுப்புரம் மாவட்டம் வல்லம் சார்பதிவாளர் தேவராஜன், பல்லாவரம் சார்பதிவாளராகவும், திருவண்ணாமலை வழிகாட்டி சார்பதிவாளர் ஜெய்சங்கர், சேலையூர் சார்பதிவாளராகவும், திண்டிவனம் அசல் பத்திரப்பதிவு சார்பதிவாளர் உமாசங்கரி, திருவொற்றியூர் சார்பதிவாளராகவும், திண்டுக்கல் நிர்வாகம் சார்பதிவாளர் கார்த்திகேயன்,

தாம்பரம் இணை எண்1 சார்பதிவாளராகவும், பழனி இணை 1 சார்பதிவாளர் துரைமகாலிங்கம் திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் சார்பதிவாளராகவும், திருவள்ளூர் வழிகாட்டி சார்பதிவாளர் சங்கர், பொன்னேரி சார்பதிவாளராகவும், பெரியகுளம் எழுமலை சார்பதிவாளர் இந்துநேசன், மதுராந்தகம் சார்பதிவாளராகவும், சிவகாசி சார்பதிவாளர் செந்தில்ராஜ்குமார், கூடுவாஞ்சேரி சார்பதிவாளராகவும்,

சிதம்பரம் பரங்கிப்பேட்டை சார்பதிவாளர் பாலாஜி ரெட்கில்ஸ் சார்பதிவாளராகவும், மதுரை உசிலம்பட்டி சார்பதிவாளர் கருப்பசாமி செய்யூர் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல மொத்தம் 40 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: