சென்னை: காயிதே மில்லத் 131வது பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் விஜய் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கேரள மாநில தொழில் துறை அமைச்சர் குஞ்ஞாலிகுட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
