ரூ.200 கோடி பணமோசடி வழக்கு; நடிகை ஜாக்குலின், சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றச்சாட்டு பதிவு

புதுடெல்லி: பிரபல மோசடி மன்னனும், இடைத்தரகருமான சுகேஷ் சந்திரசேகர், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்று தர லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.200 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாந்த் சர்மா முன்னிலையில் கடந்த 30ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியாபால், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிங்கி இரானி உள்பட 17 பேர் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கில் நேற்று டெல்லி நீதிமன்றம் முறைப்படி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

Related Stories: