திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதத்தில் 1.21 கோடி லட்டுகள் விற்கப்பட்டது. மேலும் பக்தர்கள் ரூ.120.28 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு மே மாதத்தில் 25.45 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ.120.28 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தினர். மொத்தம் 1,21,35,528 லட்டுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு லட்டு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
2024 மே மாதத்தில் 1.01 கோடி லட்டுகள் விற்பனையான நிலையில், அது 2025ல் 1.10 கோடியாக அதிகரித்தது. தற்போது, 2026ல் விற்பனை 1.21 கோடியை தாண்டியுள்ளது. பிரசாதம் தயாரிப்பில் தரத்திற்கு முதன்மை அளிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஒரு நாளைக்கு சராசரியாக 4.08 லட்சம் லட்டுகளை உற்பத்தி செய்கிறது.
