பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அசத்தலாய் வென்ற மார்தா: 4ம் சுற்றுக்கு முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக், சுவிட்சர்லாந்து வீராங்கனையை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக், சுவிட்சர்லாந்து வீராங்கனை விக்டோரிஜா கொலுபிக் மோதினர்.

துவக்கம் முதல் துடிப்புடன் ஆடி ஆதிக்கம் செலுத்திய மார்தா, முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர் அந்த செட்டையும் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை வாங் ஸியு – உக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோடப்ஸேவா மோதினர். இப்போட்டியின் முதல் செட்டை, வாங் ஸியு எவ்வித சிரமமுமின்றி, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அநாயாசமாக கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் யூலியா ஈடுகொடுத்து ஆடியபோதும், கடைசியில் அந்த செட்டையும் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வாங் ஸியு வசப்படுத்தினார். அதனால், 2-0 என் நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: