சண்டிகர்: குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமாக ஆடி 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லி 25 பந்துகளில் 43 ரன்கள் குவித்து சிறந்த அடித்தளம் அமைத்துத் தந்தார்.
இந்த ரன்களுடன் சேர்த்து, நடப்பு சீசனில் கோஹ்லி குவித்த ரன்கள் எண்ணிக்கை 600ஐ கடந்தது. இதற்கு முன், 2023, 2024, 2025ல் நடந்த ஐபிஎல் போட்டிகளிலும் கோஹ்லி 600 ரன்களுக்கு மேல் விளாசி உள்ளார். இதன் மூலம் தொடர்ந்து 4 முறை 600 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவர் அரங்கேற்றி உள்ளார்.
