ரந்தீர் சிங் காலமானார்

 

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரரும், விளையாட்டுத்துறையில் சிறந்த நிர்வாகியுமான ரந்தீர் சிங் (79) டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு மனைவி வினிதா மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

கடந்த 2024ம் ஆண்டு, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவராக, 4 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அப்பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கு முன், 1991 முதல் 2015 வரை, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் பொது செயலாளராக அவர் பணியாற்றி இருந்தார்.

Related Stories: