பெர்த்: ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர், 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றனர். இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. பெர்த் நகரில் நேற்று நடந்த 3வது போட்டியில் இரு அணிகளும் மோதின. முதல் இரு கால் பகுதி ஆட்டங்களில் இரு அணிகளும் கோல் போட முடியாமல் தவித்தன. 3வது கால் பகுதி ஆட்டத்தில், 36வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை சோனம் அபாரமாக பந்தை கடத்திச் சென்று கோலாக்கினார்.
அவரைத் தொடர்ந்து 49வது நிமிடத்தில் இந்தியாவின் லால்ரெம்ஸியாமி அபாரமாக பந்தை கடத்திச் சென்று ஃபீல்ட் கோல் போட்டார். அதேசமயம் ஆஸி வீராங்கனைகளால் கடைசி வரை கோல் போட முடியவில்லை. அதனால், 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை அடுத்து, 2-1 என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த அணிகள் இடையிலான கடைசி மற்றும் 4வது போட்டி மீண்டும் பெர்த் நகரில் நடைபெற உள்ளது.
