இலவச எக்ஸ்ரே முகாம்

தேனி, மே 28: தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டில் உள்ள பகவதி அம்மன் கோயில் அருகே, மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே திட்டத்தின் கீழ் இலவச காசநோய் கண்டறியும் எக்ஸ்ரே முகாம் நடந்தது.

இதில் 80 பயனாளிகளுக்கு இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சவுந்தர்ராஜன், முகமது அசது, ரேடியோகிராபர்கள் நாகேந்திரன், ரேவதி மற்றும் 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் உள்பட பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: