பாலக்காடு-எர்ணாகுளம் மெமு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

பாலக்காடு, மே 28: பாலக்காடு-எர்ணாகுளம்-பாலக்காடு மெமு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. 66609 என்ற எண் கொண்ட பாலக்காடு-எர்ணாகுளம் மெமு எக்ஸ்பிரஸ் ரயிலும், எர்ணாகுளம்-பாலக்காடு மெமு எக்ஸ்பிரஸ் ரயிலும் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது 2 ரயில்களிலும் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இதேபோல மட்காவ்-எர்ணாகுளம் சந்திப்பு-மட்காவ் பிரதிவார எக்ஸ்பிரஸிலும், ஏசி 3 டயர் கோச் ஒன்று அதிகமாக இணைக்கப்பட்டது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு பெட்டி இணைக்கப்பட்டதால் பெட்டிகளின் எண்ணிக்கை 21 ஆனது.

 

Related Stories: