அவிநாசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க இடம் ஆய்வு

அவிநாசி, மே 28: அவிநாசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடம் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி சேவூர் சாலையில் சூளை பகுதியில் அவிநாசி சார்பு நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், அவிநாசி பகுதியில் கூடுதல் நீதிமன்றம் உள்பட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி நேற்று ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட கோட்டாட்சியர் சிவப்பிரகாஷ், அவிநாசி தாசில்தார் ஜெகநாதன், நகராட்சி ஆணையாளர் அனுநந்தினி, அவிநாசி சார்பு நீதிமன்ற குற்றவியல் நடுவர் நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Related Stories: