ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கோவை, மே 28: கோவை சிங்காநல்லூர் குளத்தேரி ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோயில் மற்றும் கன்னி மூல கணபதி, நாகலிங்கேஸ்வரர், பாலமுருகர், கருப்பராயன், நவகிரக சன்னதிகள் உள்ளது. இந்த கோயில் திருக்குட நன்னீராட்டு விழா, மகா கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி, புனித தீர்த்தங்கள் அழைப்பு, புற்று மண்டு எடுத்து வருதல், முளைப்பாரி அழைப்பு, வாஸ்து வழிபாடு, யாகசாலை போன்றவை நேற்று நடந்தது.

இதில், பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை பீடம் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பங்கேற்று துவங்கி வைத்தார். தொடர்ந்து இன்று இரண்டாம் கால வேள்வி நடக்கிறது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை(29ம் தேதி) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்கிறது. இதில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்கிறார். தொடர்ந்து, மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

 

Related Stories: