சென்னை: தவெக ஐடி விங்க் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது; ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்ற செயலகத்திற்குத்தான் வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளற வேண்டியது. தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது.
ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் கழகத்தின் மீதும் பழிபோடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து, தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்.
கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
