சிதம்பரம்: சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி நேற்று கூறியதாவது: தமிழ்நாட்டில் திமுக கடந்த 5 ஆண்டு காலத்தில் சிறப்பான ஆட்சி நடத்தியது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நீண்ட காலமாக திமுகவில் அங்கம் வகித்த கட்சி. முஸ்லிம் லீக் வாக்கு என்பது வேறு, முஸ்லிம்களின் வாக்குகள் என்பது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் 70%க்கும் அதிகமாக திமுகவிற்குதான் முஸ்லிம்கள் வாக்களித்தார்கள். பேராசிரியர் காதர் மொய்தீன் மூத்த அரசியல்வாதி. எங்களுடைய முடிவை யாரும் விமர்சிக்க கூடாது.
விமர்சனம் செய்தால் நாங்களும் அதேபோல் விமர்சனம் செய்வோம் என்று பேசுவது பெரிய மனிதருக்கான அழகாக தெரியவில்லை. சோதனையான காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு துணையாக நின்றது திமுக. அதனை காங்கிரஸ்காரர்கள் யாராவது மறுக்க முடியுமா?. நெருக்கடியான நேரத்தில் எங்களின் மனிதநேய ஜனநாயக கட்சி திமுகவுடன் இருக்கிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்வரை ஆதரவாகதான் நாங்கள் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
* சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு
‘‘தமிழகத்தில் சிறுமிகளின் பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் இதுபோன்று சம்பவங்கள் நடந்தபோது கடுமையாக கண்டித்தவர்கள் எல்லாம் தற்போது ஏன் மவுனமாக இருக்கிறீர்கள். சினிமாவில் வருவதுபோல் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று தற்போது ஒரு அமைச்சர் சொல்கிறார். இதைத்தான் நாங்களும் சொன்னோம். சினிமா வேறு, அரசியல் வேறு. அதிகாரத்திற்கு வந்த பின்பு நாங்க சொன்ன டயலாக்கை நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது. கடந்த ஆட்சியில் பவர் கட் நடந்தபோது கடுமையான விமர்சனங்கள் செய்தீர்கள். உங்களுக்கு வந்தா ரத்தம்… மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா…, பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 கொடுக்கப்படும் என்று சொன்னீங்க ஏன் கொடுக்கவில்லை’’ என்று தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
