சென்னை: மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் தேனாம்பேட்டை மண்டலம், கே.பி.தாசன் சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடைபெற்றது.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-122, 123, 124, 125, 126 மற்றும் 171 ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், சாலை, பூங்கா, கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், தெருமின் விளக்குகள், பொதுசுகாதாரம், அம்மா உணவகங்கள், திடக்கழிவு மேலாண்மை, மயானபூமி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, தொடர்புடைய துறை அலுவலர்களுடன் அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் நரேந்திரன் நாயர், காவல் இணை ஆணையாளர் பண்டி கங்காதர், காவல் துறை ஆணையாளர் (மயிலாப்பூர்) கார்த்திக் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
