அற்ப பதவிக்காக அரசியல் பண்றாங்க: திருமாவளவன், காதர் மொகிதீன் நன்றி கெட்டவர்கள்: தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு பி.ஜைனுல் ஆபிதீன் கடும் கண்டனம்

 

சென்னை: தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு பி.ஜைனுல் ஆபிதீன் கூறியிருப்பதாவது: தேர்தலுக்குப் பிறகு சில கட்சிகள் எடுத்திருக்கிற நிலைப்பாடு வந்து நியாயமற்றதாக உள்ளது. வெளியில் இருந்து ஆதரவு என திருமாவளவன் ஆரம்பத்தில் சொன்னார். பிறகு அமைச்சரவையில் இடம்பெற்று, ஆளுங்கட்சி ஆயிட்டார்.

ஆதவ் அர்ஜுனாவை முன்பு கட்சியில் சேர்த்ததற்குப் பிறகு உள்ள திருமாவளவன் வேற. தடம் மாறிட்டாரு, விலை போயிட்டாரு. தவெக ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என முன்னர் சொன்னார். பின்பு ஆர்எஸ்எஸ் பிள்ளைகள்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. கவர்னர் ஆட்சி வரக்கூடாது என்பதற்குத்தான் ஆதரிக்கிறேன் என்று சொன்னார். ஆனால், ஆட்சியில் இப்ப சேர்ந்துட்டார். இப்ப அதை சொல்ல முடியாது.

அடுத்து ஐ.யு.எம்.எல். ஆரம்பத்தில் ஆதவ் அர்ஜுனா ஆதரவு கேட்கும்போது, நாங்க ஆதரிக்க மாட்டோம்னு தெளிவா சொன்னாங்க. அதுக்குப் பிறகு, ‘வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம்’ என்ற நிலைப்பாட்ட வந்து மு.க.ஸ்டாலின் கிட்ட கேட்கிறாங்க. அப்படி கேட்டால் என்ன செய்வாங்க, யாருமே ‘போகாதே’ என்று சொல்ல மாட்டாங்க. ‘ஆதரிச்சுக்கிருங்க’னு சொல்லிட்டாரு.

ஐ.யு.எம்.எல்-க்கு ஓட்டு போட்டவர்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு போட்டவர்களும் விஜய் வேணாம் என்றுதானே ஓட்டு போட்டாங்க. மு.க.ஸ்டாலின் முதல்வரா வரணும் என்றுதானே ஓட்டு போட்டாங்க. அந்த மக்களுக்கு துரோகம் செய்ற வகையில விசிக, ஐ.யு.எம்.எல் முடிவு எடுக்குறாங்க. ரெண்டு தலைவர்களும் நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள். திமுகவை பொறுத்தவரைக்கும் அவங்க செஞ்ச உதவிக்கு வந்து நன்றியுள்ள சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது.

முஸ்லிம் தலைவர்கள் எப்படா வாய்ப்பு கிடைக்கும், போகலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அற்ப பதவிக்காக வேண்டி சந்தர்ப்பவாத அரசியல் பண்றாங்க. சுயநலத்துக்கு செய்யக்கூடிய முடிவுகளுக்கெல்லாம் ஒரு நல்ல நோக்கம் கற்பிக்கப் பார்க்கிறாங்க. கண்டிப்பா இது கேவலமான செயல். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: