உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் ஆஜராக 17 சிவில் வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசு ஆணை வெளியீடு

 

சென்னை: தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், சிவில் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர்கள், அரசு பிளீடர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தவெக வழக்கறிஞர்கள் அணியிலிருந்து புதிய அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக இதுவரை 8 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு பிளீடர்களாக ஆர்.கவுரி, ஜி.தன மாத்ரி, முகமது பயாஸ் அலி, எம்.சிவவர்த்தனன், எம்.குருபிரசாத், அமிர்தா பூங்கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்தர், டோமினிக் எஸ்.டேவிட், ஆர்.சக்ரவர்த்தி ஆகிய 10 பேரும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராவதற்காக பி.சரவணன், எம்.பி.செந்தில், ஆர்.பார்த்திபன், ஐ.பினய்கஸ், எஸ்.சிவசுப்ரமணியன், எஸ்.சிவ திலகர், கே.பொற்கொடி ஆகிய 7 பேரையும் நியமனம் செய்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் (சட்ட அதிகாரிகள்) ரீட்டா ஹரிஸ் தக்கர் ஆணை பிறப்பித்துள்ளார்.

Related Stories: