சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ரைபிள் கிளப் 1952ம் ஆண்டு விளையாட்டுத்திறன், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தற்காப்பு உணர்வை உருவாக்கும் நோக்கத்திற்காக சில உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. ரைபிள் கிளப் தலைவராக தற்போது, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளார்.
எழும்பூர், ரைபிள் கிளப்பில் உள்ள துப்பாக்கி சுடு தளத்தில் புனரமைப்பு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று எழும்பூர் ரைபிள் கிளப்பில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடும் தளத்திற்கான புனரமைப்பு கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பிறகு விரைந்து பணிகளை முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
