புதுடெல்லி: பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து மே 28ம் தேதி நடக்க இருந்த கியூட் யூஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பொது அறிவிப்பில், ‘‘மே 28ம் தேதியன்று ஈத் உல் அஸ்ஹா (பக்ரீத்) விடுமுறை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால், 2026ம் ஆண்டிற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு கியூட் யூஜி தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது.
புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர் இணைய தளங்களை பார்வையிட்டு புதிய தகவல்களை தெரிந்து கொள்ளுமாறும், ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் என்டிஏ உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
