கடத்தப்பட்ட 6 பேரை விடுவிக்கக்கோரி மணிப்பூரில் நாகா இன மக்கள் போராட்டம்

 

இம்பால்: மணிப்பூரில் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆறு பேரை உடனடியாக விடுவிக்கக்கோரி நாகா இனத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூரில் கடந்த 13ம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் மூன்று தேவாலயத் தலைவர்கள் தாக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே காங்போக்பி மற்றும் சேனாபதி மாவட்டங்களில் ஆயுதமேந்திய குழுக்களால் நாகா சமூகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களில் 31 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 6 பேர் மட்டும் தொடர்ந்து பிணைக்கைதிகளாகவே பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ற எந்த தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் பேரையும் விடுவிக்கக்கேரி நாகா இன மக்கள்தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாகா மக்கள் ஒன்றியம் இம்பால் என்ற அமைப்பு சார்பில் தலைநகர் இம்பாலில் நேற்று போராட்டப் பேரணி நடத்தப்பட்டது. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் சந்தை பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி முதல்வரின் வீடு நோக்கி சென்றது. அவர்களை முதல்வரின் வீட்டிற்கு சுமார் 200மீட்டர் தொலைவிலேயே பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினார்கள்.

அமைப்பின் பிரதிநிதிகள் மட்டும் முதல்வர் கேம்ச்சந்த் சிங்கை சந்தித்து மனு கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மனுவில், 6 நாகா பொதுமக்களை கடத்திச் சென்றதாக கூறப்படும் ஆயுதம் ஏந்திய குகி தீவிரவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே மிசோரமில் வணிகம் மற்றும் தொழில்துறை , புவியியல் மற்றும் சுரங்கத்துறைகளின் கூடுதல் இயக்குனராக பணியாற்றிய லால்ரோடிங் ஏப்ரல் மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். ஆனால் 24ம் தேதி வெளியிட்டப்பட்ட அரசு ஆணையில் லால்ரோடிங் சுற்றுலா இயக்குனர் மற்றும் முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி ஆகிய இரண்டு பொறுப்புக்களையும் வழங்கி அரசு மீண்டும் பணிவாய்ப்பு அளித்தது.

மே 13ம் தேதி முதல்வரை சந்தித்து மிசோ ஜிர்லாய் பாவ்ஸ் மாணவர் அமைப்பு முறையிட்டதை அடுத்து அவருக்கு சுற்றுலா இயக்குனராக வழங்கப்பட்ட மறுவேலைவாய்ப்பு மட்டும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மே 22ம் தேதி லால்ரோடிங்க் சுற்றுலா துறை கூடுதல் பொறுப்பையும் உடனடியாக ஏற்றுக்கொள்வார் என்று அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த மிசோ ஜிர்லாய் பாவ்ஸ் மாணவர் அமைப்பானது சுற்றுலா துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: