சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று ஆணவத்தோடு அறிவித்திருப்பதால், கர்நாடக அரசை கண்டித்தும், மேகதாது அணையைக் கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் வரும் ஜூன் 2ம்தேதி காலை 10 மணி அளவில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொ.ம.தே.க, ம.ம.க, மனிதநேய ஜனநாயகக் கட்சி, மே 17 இயக்கம், த.வா.க, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தற்சார்பு விவசாயிகள் சங்கம் இணைந்து எனது தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் பொதுநல அமைப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
