விளையாட்டு துறையில் வீரர்கள் சாதனை படைக்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுரை

 

சென்னை: விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நேற்று நேரு உள்விளையாட்டரங்கில் விளையாட்டு துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதன் பின் அமைச்சர் கூறியதாவது: 2026-27 ஆண்டில் விளையாட்டு துறையால் மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு பணிகள், அரசு துறை ஒதுக்கீட்டில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத பணி வாய்ப்புகள் வழங்குவது குறித்தும், விளையாட்டு விடுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பள்ளி பயிலும் காலங்களிலேயே விளையாட்டில் சிறந்து விளங்கிவரும், ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். விளையாட்டு துறையில் சாதனை படைக்க பொருளாதாரம் தடையாக இருக்கக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: