எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது: முதல்வர் விஜய்யை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

 

சென்னை: எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று முதல்வர் விஜய்யை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், அலுவலகத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படமும், ஆங்கில கால நடைமுறைப்படி, இருக்கையில் போடப்பட்டிருந்த வெள்ளை துண்டை அகற்றியது போன்ற செய்திகளும் இணையத்தில் வேகமாக பரவியது. இந்த நிலையில், அலுவலகத்தில் அமர்ந்து சாப்பிடுவது போன்று வெளியானது ஏஐ புகைப்படம் என்றும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களும் வெள்ளை துண்டு போடாமல்தான் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இணையத்தில் பதிலடி
கொடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் வெளியிட்ட விடியோ ஒன்றை பகிர்ந்திருக்கும் திமுக ஊடகப் பிரிவு, “சகோதரரின் மாபியா ரீல்ஸ் தொழிற்சாலை முழுவதும் அம்பலமாகி விட்டது. துண்டு சாகசம் முதல் ஏஐ மதிய உணவுப் புகைப்படம் வரை, தவெகவினரின் போலிச் செய்திப் பிரசாரங்கள் அனைத்துத் திசைகளிலிருந்தும் தோலுரிக்கப்பட்டு வருகின்றன” என்று பதிவிட்டுள்ளனர். இதனை மறுபதிவிட்டிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘‘பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: