சென்னை: தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான புதிய பாடத்தை ஆசிரியர்கள் நடத்துவதற்கான பயிற்சி, சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று தொடங்கியது. அந்த பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற பின்னர் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கையேடுகளை வழங்கினார். அதன்பிறகு அமைச்சர் அளித்த பேட்டி: பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது.
1 முதல் 3ம் வகுப்பு குழந்தைகளுக்கு சற்று தாமதமாக திறக்கப்படும். தமிழக பட்ஜெட்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை என்பதில் எந்த சமசரமும் செய்து கொள்ளாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அடிப்படை வசதிகள் பள்ளிகளில் செய்து கொடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்து பிஎம் திட்டத்தில் கையொப்பமிட வலியுறுத்தி வருகிறது. அது மாணவர்களுக்கான நிதி.
அதை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பது நியாயமில்லாத ஒன்று. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை எங்கள் கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. சிங்கப்பூரில் கூட உலக தொடர்்புக்கு ஆங்கிலம் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் கொள்கை சமரசம் என்பது இல்லை. ஆசிரியர்கள் பிரச்னைகள் இன்னும் இருக்கிறது. அவற்றை பேசித் தீர்ப்போம். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
