சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் பணி முடித்து வீடு திரும்புகையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக அரசு, தொடரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, தமிழ்நாடு தொடர்ந்து மகளிருக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலேயே செயல்படுவது, புதிய அரசின் கடமை.
